உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் ஆலோசகராக விஜயகுமார் நியமனம்!

உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்பு விவகார ஆலோசகராக மூத்த பாதுகாப்பு ஆலோசகர் கே.விஜயகுமார் இன்று நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.


தமிழகத்தை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான விஜயகுமார் சென்னை மாநகர காவல்துறை ஆணையராக பணியாற்றியவர். சந்தனக் கடத்தல் வீரப்பன் வழக்கை சிறப்பாக கையாண்டு, அவரை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றார்


இவர் பணி ஓய்வு பெற்ற பின்னர் மாவோயிஸ்ட்கள் ஆதிக்கம் நிறைந்த மாநிலங்களில் அவர்களை ஒடுக்கும் நடவடிக்கையில் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து ஜம்மு காஷ்மீர் ஆளுநரின் பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றினார்.