Pamban Island: பாம்பன் பாலத்துக்கு ஒரு பயணம் செய்வோமா?
ராமேஸ்வரம் அழகிய கடற்கரைகள் சூழ்ந்த ஒரு சிறப்பு மிக்க தீவு நகரம். தமிழகத்தின் மிக முக்கிய ஒரு சுற்றுலா பகுதி ராமேஸ்வரம் ஆகும். இங்குள்ள பாம்பன் பாலத்தில் ரயிலில் பயணிப்பது சுற்றுலா பயணிகளின் அலாதியான பிரியம். இங்கு பயணிக்கும்போது கிடைக்கும் உணர்வு அற்புதம் ஆகும். சரி வாருங்கள் பாம்பன் பாலத்தில் பயணிப்போம்.

 


எங்குள்ளது?


வங்கக் கடலில் அமைந்துள்ள இந்த ராமேஸ்வரம் தீவு வரலாற்று முக்கியத்துவம் மட்டுமல்லாது ஆன்மீக முக்கியத்துவம் கொண்ட பகுதியாகவும் விளங்குகிறது. இங்கு செல்லும் வழியில் அமைந்துள்ள பாலம்தான் பாம்பன் என்று அழைக்கப்படுகிறது. பாம்பன் பாலம் பாம்பன் எனும் நகரத்தில் அமைந்துள்ளது.



இந்த நகரத்தை இந்தியாவுடன் இணைத்து வைத்திருப்பது ஒரு கடற் பாலம். இந்தியாவின் முதல் கடற்பாலம் என்று அறியப்படும் பாம்பன் பாலம் உலக புகழ் பெற்றது.


உலகின் பல நகரங்களிலிருந்தும் இந்தியாவுக்கு சுற்றுலா வருபவர்கள் ராமேஸ்வரத்துக்கு வருகை தர விருப்பம் தெரிவிக்கின்றனர்.


 



 


பாம்பன் பாலத்தில் பயணிப்பது எப்படி?