மத்திய அரசு கொண்டு வந்த 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான கட்டாய பொதுத்தேர்வு முறைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. எனினும், நடப்பாண்டு முதல் 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடைபெறும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
இதனைத்தொடர்ந்து, 8 ஆம் வகுப்பு தேர்வு 2020ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் தேதி துவங்கி, ஏப்ரல் 17ஆம் வரை நடைபெறும். 5ஆம் வகுப்பு தேர்வு ஏப்ரல் 15ஆம் தேதி துவங்கி, ஏப்ரல் 20ஆம் தேதி வரை நடைபெறும் என பொதுத்தேர்வுக்கான அட்டவணையை பள்ளி கல்வித்துறை வெளியிட்டது. அத்துடன், 5,8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகளை அவர்கள் படிக்கும் பள்ளிகளிலேயே எழுதலாம் என கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்த 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான கட்டாய பொதுத்தேர்வு முறைக்கு தமிழகத்தில்