தஞ்சாவூர் பெருவுடையார் கோவிலின் குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெற்றுவருகிறது.
உலகையே வியக்கவைக்கும் கட்டிடக் கலையுடன் எழுப்பப்பட்டுள்ள தஞ்சாவூர் பெருவுடையார் கோவிலுக்கு வயது 1010. ராஜராஜ சோழனால் ஏழே ஆண்டுகளில் இந்த பிரம்மாண்ட கோவில் கட்டப்பட்டுள்ளது.
பிரசித்திபெற்ற இந்த கோவிலின் குடமுழுக்கு விழா 23 ஆண்டுகளுக்குப் பின் இன்று நடைபெறுவதால் தஞ்சை நகரம் முழுக்க மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
கங்கா, யமுனா, காவிரி ஆகிய நதிகளின் தண்ணீரைக் கொண்டுவந்து அபிஷேகம் செய்யப்படவுள்ளது. காலை 9.30 மணிக்கு விமானத்தில் உள்ள கலசத்தில் புண்ணிய நீர் ஊற்றி குடமுழுக்கு நடைபெறுகிறது.